ஜூலையில் பெற முடியாதவர்கள் துவரம் பருப்பு, பாமாயில் ஆகஸ்ட் மாதம் பெறலாம்: அறிவிப்பு


சென்னை: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூலை மாதத்தில் நியாய விலை கடைகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல், சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தால் குடும்ப அட்டைதாரர்களின் நன்மையை கருத்தில் கொண்டு ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்