ரெய்டுக்கு சென்ற போலீசிடம் சிக்காமல் இருக்க ரவுடி வீட்டு கழிப்பறையில் பதுங்கிய டிஎஸ்பி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் தம்மனம் பைசல். இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் மது விருந்து நடப்பதாக அங்கமாலி போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் தம்மனம் பைசலின் வீட்டில் சோதனை நடத்தியபோதுஅங்கிருந்த ஆலப்புழா குற்றப்பிரிவு டிஎஸ்பி சாபு வீட்டு கழிப்பறையில் ஒளிந்து கொண்டார். சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசார் ரவுடி தம்மனம் பைசல் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து டிஎஸ்பி சாபுவை சஸ்பெண்ட் செய்ய டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சாபு வரும் 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆலப்புழா குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் சஸ்ணெ்ட் செய்யப்பட்டதையடுத்து பிரிவு உபசார விழா ரத்து செய்யப்பட்டது. இதற்காக குற்றப்பிரிவு அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்