தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

Related posts

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!!

உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது