வறண்ட சருமமா… கவலை வேண்டாம்!

மழைக்காலமும் குளிர்காலமும் வறண்ட சருமத்தின் எதிரி என்றாலும் சரியாகப் பொருந்தும். இதோ துவங்கி விட்டது மழைக்காலம், தொடர்ந்து நமக்கு ஜனவரி இறுதி வரை குளிர்காலம் வறண்ட சருமத்தைப் பராமரிப்பது எப்படி இதோ சில டிப்ஸ்!
*பொதுவாக மழை, குளிர் என்றாலே வெந்நீர் வைத்துக் குளிப்பது வழக்கம். அப்படி வெந்நீர் பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஓரளவு வெப்பநிலையைக் குறைத்துக் குளிக்கலாம்.
*குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடலில் பூசிக்கொண்டு குளிப்பதால் சோப், பாடி வாஷ் , மேலும் காலநிலை காரணமாக சருமம் வறட்சி அடைவது குறையும்.
*ஏசி தேவைப்படாது, ஆனாலும் அலுவலகங்கள், பொது இடங்களில் தவிர்க்க முடியாது. நல்ல மாய்ச்சுரைஸர் அல்லது நல்ல தரமான பாடி லோஷன்கள் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தினர் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை பாடி லோஷன், மாய்ச்சுரைசர் பயன்படுத்தலாம்.
*வாரம் ஒரு முறை எண்ணெயைக் காய வைத்து தேய்த்து பழங்கால முறையில் சீயக்காய், கடலைமாவு கொண்டு உடல், தலை என பயன்படுத்திக் குளிக்கலாம்.
*அதீத வாசனை கொண்ட ஷாம்பூ, சோப் போன்றவைதான் உடலின் வறட்சிக்கு இன்னொரு முக்கியக் காரணம். என்கையில் கூடுமானவரை ஜெல் வடிவ அல்லது வறண்ட சருமத்திற்கே உரிய சோப், ஷாம்புகளைப் பயன்படுத்தலாம்.
*பாதாம் எண்ணெய் மாய்ச்சுரைசர்களாகப் பயன்படுத்தலாம். மேலும் முடிக்கும் கூட பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
*முல்தானி மட்டி, கற்றாழை, சந்தனம் போன்றவற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறண்ட சருமம் கொண்டவர்கள் அதிக நேரம் வைத்திருக்காமல் கழுவி விட வேண்டும். இல்லையேல் மேலும் வறண்டு விடும்.
*தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். நிறைய பழச்சாறுகள், பழங்கள் உண்பதும் அவசியம்.
*கணினி, மொபைல் அதிகம் பயன்படுத்துவதாலும் கூட சருமம் ஈரப்பதம் குறையும். என்கையில் இடைவேளைக் கொடுத்து பயன்படுத்தலாம். கண்களில் உண்டாகும் வறட்சியும் கூட நீங்கும்.
– கவின்

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு