விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி: போதை பயணி கைது

பெங்களூரு: விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் கான்பூரை சேர்ந்த பிரதீக்(30) என்பவர் பயணித்துள்ளார். இவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. சக பயணிகளுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சித்துள்ளார். நடுவானில் போதை வாலிபரின் இத்தகைய செயலால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விமான ஊழியர்கள் விமானிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெங்களூரில் விமானம் தரையிறங்கியவுடன் அவர் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் மது அருந்தி இருந்தது உறுதியானது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு