குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 5 மாதத்தில் ரூ.14.10 கோடி அபராதம் வசூல்: மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையை விபத்து இல்லா மாநகரமாக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த நபர்களிடம் அபராத தொகை வசூலிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 10 கால் சென்டர்கள் மூலம் அபராத செலுத்தாத நபர்களுக்கு அழைத்து செய்து வழக்கு தொடர்பாக நினைவூட்டி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, சென்னை முழுவதும் கடந்த 10ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் நிலுவையில் இருந்த 387 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக ரூ.39.70 லட்சம் வசூலிக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 5 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 13,638 பேரிடம் அபராதமாக 14 கோடியை 10 லட்சத்து 95 ஆயிரத்து 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்தாமல் உள்ள நபர்களிடம் இருந்து 370க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை