குஜராத் கடற்கரையில் ரூ.800 கோடி போதைபொருள் பறிமுதல்

காந்திதாம்: குஜராத் மாநிலம் கட்ச் கடற்கரையில் ரூ.800 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குஜராத் மாநிலத்தில் கடற்கரை வழியாக அதிக அளவு போதைப்ெபாருள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து கடற்கரை பகுதிகளில் போதைத்தடுப்பு பிரிவு போலீசார் கூடுதலாக கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகருக்கு அருகில் உள்ள மிதி ரோஹர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் கொட்டப்பட்ட சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ கோகைன் போதைப்பொருளை போலீசார் மீட்டனர். இவை மொத்தம் 80 பாக்கெட்டுகள் ஆகும். ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்டது என்று கட்ச்-கிழக்கு பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறினார். பாகிஸ்தானில் இருந்து இவை கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Related posts

அதானி துறைமுகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ராகுல் காந்தி கேள்வி

வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சியில் 1,311 விளம்பரப் பலகைகள் அகற்றம்

தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!