போதைப்பொருளின் ஊற்றுக்கண்ணே குஜராத்துதான்…

கே.பி.முனுசாமி கூறுகையில், ‘நான் அவருக்கு குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்ட மக்கள், அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட மக்கள், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்ட தொண்டர்கள், பொதுமக்கள் என யாரும் நரேந்திர மோடியின் சித்து விளையாட்டிற்கு ஏமாறமாட்டார்கள். இந்த போதைப் பொருளின் ஊற்றுக்கண்ணே குஜராத்தில்தான் இருக்கிறது. குஜராத்தை ஆட்சி செய்கிறவர்கள் பாஜ.வை சேர்ந்தவர்கள். கடந்த 25 ஆண்டு காலமாக பாஜவினர்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

அந்த மாநிலத்திற்கு தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரானில் இருந்து போதைப்பொருட்கள் வருகிறது. அங்குதான் பிரிக்கப்படுகிறது. அங்குதான் மாபியா கூட்டம் இருக்கிறது. அதோடு ஹெராயினை பதப்படுத்தும் உற்பத்தி அலகுகள் காளான்களை போல் குஜராத்தில் முளைத்துக்கொண்டு, சிறுசிறு தொழிற்சாலைகள் இருக்கிறது. இப்போது கூட காண்ட்லா போர்ட், அதானி போர்ட்டில் 3 மெட்ரிக் டன் போதைப்பொருட்கள் பிடித்திருக்கிறார்கள். அதன் உலக மதிப்பு ₹21 ஆயிரம் கோடி.

இப்படி அந்த மாநிலத்தில் இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு போதைப்பொருட்கள் கிடைக்கிறது. ஒரு சர்வேயில், குஜராத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் போதைப் பொருட்கள் உட்கொண்டு இறக்கிறவர்கள் அதிகம் என சொல்கிறது. முதலில் அவர்கள், அவர்களின் முதுகில் இருக்கிற அழுக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு