போதைப்பொருள் விற்பனை: கல்லூரி மாணவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எம்டிஎம்ஏ போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரி போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அடிவாரம் என்ற இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அந்த வாலிபரிடம் 7 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து மேலும் விசாரித்தனர். இதில் அவர் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த முகம்மது நவுப் (19) என்பது தெரியவந்தது. கோழிக்கோட்டில் ஒரு சட்டக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து எம்டிஎம்ஏவை வாங்கி கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்து உள்ளார். முகம்மது நவுப்பிடம் இருந்து போதைப் பொருளை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய எலக்ட்ரானிக் தராசு மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் இன்று தாமரசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்