கோயம்பேடு பஸ் நிலையத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரத்தில், போலீசார் மற்றும் நடிகர்கள் பங்கேற்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோயம்பேடு காவல் துணை ஆணையர் குமார் தலைமையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரோபோ சங்கர், திவாகர், தங்கதுரை ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருட்களுக்கு எதிராக தங்களது நகைச்சுவை நடிப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கியும், போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கண்ணா, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் இழப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Related posts

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு