போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை சென்னையில் கைது செய்தனர் என்ஐஏ அதிகாரிகள்..!!

சென்னை: போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட லிங்கம், வழக்கில் ஏற்கனவே கைதான குணசேகரனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். போதைப்பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கு, லிங்கம் இந்தியாவில் தங்க உதவியுள்ளார். கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை வைத்து எல்டிடிஇ மீண்டும் இந்தியா மற்றும் இலங்கையில் எழுச்சி பெற உதவியுள்ளார்.

கடந்தாண்டு ஜூலையில் விழிஞ்சம் துறைமுகத்தில் 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் கடத்தி வரப்படும் பொழுது பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் ஹாஜி சலீம் இந்தியா, இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி முகாமில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த நபர்கள் உட்பட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்