போதை பொருள் கடத்தல்காரன் செல்போனில் 800 இளம்பெண்களின் நிர்வாண படங்கள்: பலரை பலாத்காரம் செய்து பணம் பறித்ததும் அம்பலம்

திருமலை: ஆந்திராவில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குண்டூரில் போதைப்பொருட்களை கடத்தியது தொடர்பாக ஒரு சிலரை சிறப்பு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியான குண்டூரை சேர்ந்த மஸ்தான்சாகிப் (32) என்பவரை தேடிவந்தனர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

கடந்த 2 மாதங்களாக போலீசாரின் பிடியில் சிக்காமல் அவர் தப்பித்து வந்த நிலையில் அவரை நேற்றுமுன்தினம் சிறப்பு அமலாக்கபிரிவு போலீசார் கைது செய்து குண்டூருக்கு அழைத்து வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சுமார் 800 கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை ஆந்திராவுக்கு கடத்தி வந்து அதனை கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து விற்று வந்துள்ளார். குறிப்பாக மாணவிகளிடம் நைசாக பேசி போதைப்பொருட்களை விற்பதோடு, அவர்களையும் போதைக்கு அடிமையாக்கி தனது வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல பெண்களை நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

வசதி படைத்த இளம்பெண்களிடம் நிர்வாண படத்தை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகரின் காதலியை மடக்கிய சாகிப்: கைதான போதைப்பொருள் விற்பனையாளர் மஸ்தான் சாகிப்புக்கும், பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் காதலிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனையறிந்த நடிகர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது காதலை முறித்துக்கொண்டார்.

Related posts

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

இலங்கை அதிபர் தேர்தல்; அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு