முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் செம்மொழி விருது, பணி ஆணைகளை வழங்கினார். 2023ம் ஆண்டிற்கான செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குனர் முனைவர் ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதுமட்டுமின்றி வெண்கலத்தால் ஆன கலைஞர் திருவுருவ சிலையும் முனைவர் சு.ராமசாமிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு