அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் மூலம் ராணுவ தகவல்கள் அனுப்பி வைப்பு ?

வாஷிங்டன் : அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் ராணுவ தகவல்களை சேகரித்ததாக அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் வட கரோலினாவில் சந்தேகத்திற்கு இடமாக பறந்த சீன உளவு பலூன் அதிபர் ஜோபிடன் உத்தரவு படி கடந்த பிப்ரவரி மாதம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடலில் விழுந்த பலூனின் உதிரி பாகங்களை கைப்பற்றி அதன் கூறுகளை அமெரிக்க ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவில் அமெரிக்க ராணுவ தளவாட கிடங்கு, விமானப்படை முகாம்கள், நாடு விட்டு நாடு பாயும் அணுசக்தி ஏவுகணைகள் பற்றிய தகவல்கள் உளவு பலூன் மூலமாக சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது உறுதியானதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சாதாரண வணிக வகை விமானங்கள் 65,000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். ஆனால் சீனாவின் இந்த பலூன் 80,000அடி முதல் 1,20,000 அடி வரை பறந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்டது உளவு பலூன் அல்ல வானிலையை கண்காணிப்பதற்கான ஓடம் என சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்