கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: நெடுங்குன்றம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணா நகர், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடு புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் திறக்கப்படாத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் சரிவர குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு