தங்கவயல் நகரசபை பேருந்து நிலையத்தில் திறப்பு விழா காணாமல் உள்ள குடிநீர் மையம்: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

தங்கவயல் :தங்கவயல் நகர சபை பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டும், அது திறக்கப் படாமல் பூட்டியே கிடக்கிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லை பகுதியில் தங்கவயல் நகரம் அமைத்துள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் சென்னை, வேலூர், கிருஷ்னகிரி ஆகிய ஊர்களுக்கும் ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்திற்கும் கர்நாடக மாநில, தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசு பஸ்கள் சென்று வருகின்றன.

இதனால் தினசரி இந்த பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சுமார் 60ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப் பட்ட நகரசபை பஸ் நிலையம் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் இருந்தது.

மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்து இருந்தது.  எனவே பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் பஸ் நிலையத்தை புனரமைக்க நகரசபை முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு இரண்டரை கோடி செலவில் பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இருந்தே பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடையாது. புனரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டு அது திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் அடிப்படை தேவையான குடி நீர் வசதியை ஏற்படுத்தி பயணிகளின் தாகத்தை போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு