குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பள்ளி பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

*போக்குவரத்து பாதிப்பு: போலீசார் பேச்சுவார்த்தை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோகூர் ஊராட்சியில் காலனி பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுசம்மந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று கிராமப்பகுதி வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து அம்பேத்கர் சிலை அருகில் திரண்டு காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி