எச்-1 பி விசா விண்ணப்பத்துக்கு இந்தாண்டு 2வது குலுக்கல்

வாஷிங்டன்: அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றுவதற்கு தகுதி வாய்ந்த நபர்களுக்கு எச்-1 பி விசாக்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி ஆண்டுதோறும் 65,000 எச்-1 பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான விசாக்கள் பெற வேண்டி கடந்த ஏப்.1 முதல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், விசாவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்காக, கூடுதலாக 2வது குலுக்கல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே எலெக்ட்ரானிக் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து குலுக்கல் நடைபெறும் என அமெரிக்க குடியேற்ற சேவை பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்