திராவிடமால் காலாவதியாகவில்லை; ஆளுநர் பேச்சுதான் காலாவதியாகிவிட்டது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கவர்னரை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், ஆளுநரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. நானே நெல்லையில் இருந்து இன்று காலை தான் சென்னை வந்தேன் என்று கூறினார். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு ‘யாமறியேன் பராபரமே’ என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

அமைச்சர்களை மாற்றவோ, நீக்கவோ முதல்வருக்கு உரிமை உண்டு, அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை தெரிவிக்கவேண்டியவர் முதலமைச்சர். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அமைச்சர் கூறினார். ஆளுநரை உரை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த துரைமுருகன்; திராவிடமால் காலாவதியாகவில்லை, ஆளுநர் பேச்சுதான் காலாவதியாகிவிட்டது என்று கூறினார்.

Related posts

விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும் தமிழ்மொழியை அழிப்போம் என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்: வைகோ ஆவேசம்

இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக: திருமாவளவன் பேச்சு

திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு