தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114 குடும்பங்களுக்கு முகவரி தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை: எழும்பூர் கண்ணப்பர் திடல் பகுதி அருகே வசித்து வந்த வீடற்றோரின் பல வருட கனவு இன்று நனவானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;

எழும்பூர் கண்ணப்பர் திடல் பகுதி அருகே வசித்து வந்த வீடற்றோரின் பல வருடக் கனவு இன்று நனவானது!

“அடுத்த மழைக்காலத்துக்குள் உங்கள் எல்லோருக்கும் வீடுகளைத் தருவோம்” என்று நம் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மக்களுக்கு சென்றாண்டு வாக்குறுதி தந்தார்கள்.

சொன்னபடியே, இன்றைய தினம் 114 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.

தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114 குடும்பங்களுக்கு முகவரித் தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு.

மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் வீடுகளைப் பெற்றுள்ள அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம் !

புதுவீட்டில் குடியேறும் அவர்களின் வாழ்க்கை சிறக்கட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்