போதிய மழை இல்லாததால் நடப்பு மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. எல் நினோ பாதிப்பின் தீவிரத்தை இந்தியா உணர்வதாக எச்சரிக்கை!!

டெல்லி : இந்தியாவில் 122 ஆண்டுகளில் எந்த ஆகஸ்ட் மாதத்திலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வறட்சியான மாதம் ஆக பதிவாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றமான எல் நினோ பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது.2015ம் ஆண்டுக்கு பிறகு குறைவான பருவமழைப் பொழிவுடன் நடப்பு பருவமழை காலம் நிறைவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, கடந்த 1,901ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஆகஸ்ட் மாதத்திலும் இல்லாத வகையில் இந்த ஆகஸ்ட் வறட்சியான மாதமாக பதிவாகி உள்ளது.

அதன்படி 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் மழையின் அளவில் 22%-த்தையும் தாண்டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மழை தரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறைவான எண்ணிக்கையில் உருவானதும் அவையும் எதிர்திசை நகர்ந்ததால் வறட்சியான ஆகஸ்ட் மாதமாக இது பதிவாகி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதம் மோசமாக இருக்காது எனவும் இயல்பான அளவில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி

தமிழ்நாட்டில் இன்று, நாளை, ஜூலை 16-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,600 ஆக விற்பனை