அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.54,000-க்கு கீழ் சென்றது!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.54,880க்கு விற்பனையாது.

23ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 27ம் தேதி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனையானது. 28ல் ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் இன்று அதிரடியாக குறைந்தது.

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.6,730க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் ரூ.101.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு