டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கல்பவிருக்‌ஷா 17வது கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கம்

சென்னை: சென்னையில் நடந்த அகர்வால் கண் மருத்துவமனையின் கல்பவிருக்‌ஷா 17வது கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கில் ஏராளமான முதுகலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். டாக்டர் அகர்வால் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு ஆண்டும் கண் மருத்துவவியல் முதுகலை மாணவர்களுக்காக கல்பவிருக்‌ஷா என்ற பெயரில் 2 நாள் தொடர் மருத்துவ கல்வித்திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தாண்டு 17வது பதிப்பாக நடைபெறும் இந்நிகழ்வு நேற்று தொடங்கியது.

இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், மற்றும் 30 கல்வியாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இந்த பயிலரங்கில் லேப் ஒன்று அமைக்கப்பட்டு அதில் மிருகங்களின் கண்களை வைத்து மாணவர்களுக்கு லைவ் வகுப்புகளும் எடுக்கப்பட்டது. முதுகலை மாணவர்களுக்கான பயிலரங்கில், மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம். சிறப்பான மருத்துவ ஆராய்ச்சிக்கு அகர்வால் விருது வழங்கபட உள்ளன. இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் அதியா அகர்வால், கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் சவுந்தரி கலந்துகொண்டனர்.

பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ‘‘மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான கல்வியாளர்களின் விளக்க உரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களிலிருந்து மதிப்புமிக்க தகவல்களையும், அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் பங்கேற்கும் கண் மருத்துவர்களின் திறன்களை இந்த முன்னெடுப்பு மேம்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன். நோயாளிகளுக்கும் மற்றும் சமூகத்திற்கும் இன்னும் சிறப்பான சிகிச்சையையும் மற்றும் சேவையையும் வழங்குவதற்கு மாணவர்களுக்கு பயிலரங்கம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!