கடலாடியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

சாயல்குடி: கடலாடியில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கிடாக்குளம் கருப்பசாமி கோயில் வருடாந்திர பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கடலாடி யூனியன் அலுவலகம் சாலை முதல் முதுகுளத்தூர் சாலையில் பெரிய மாடு, சின்ன மாடு என இருடு பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 4 கிமீ தூரம் நடந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் சித்திரங்குடி ராமமூர்த்தியின் காளை முதல் பரிசு, தூத்துக்குடி மாவட்டம், குமார செட்டியாபுரம் மகாவிஷ்ணுவின் காளை, ஏ.பாடுவனேந்தல் சேதுமுத்துவின் காளை இரண்டாவது பரிசு, வேலாங்குளம் கண்ணின் காளை மூன்றாவது பரிசு பெற்றன.

3 கிமீ தூரம் நடந்த சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் காளை, இரண்டாவது பரிசை புது சினையாபுரம் தர்மலிங்கம் காளை, மூன்றாம் பரிசை வேலாங்குளம் கண்ணன் காளை தட்டி சென்றன. மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு தங்க மோதிரம், ஆட்டுக்கிடாய், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related posts

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி