தேர்தல் பத்திரங்கள் மூலம் சுரங்கம், எஃகு ஆலைகளிடம் ரூ.944 கோடி நன்கொடை: பிஜு ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் கேள்வி

புவனேஸ்வர்: ஒடிசாவில் நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள பிஜேடி கட்சி சுரங்க தொழில்கள், எஃகு ஆலை நிறுவனங்களிடம் இருந்து ரூ.944 கோடி நன்கொடை பெற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜேடி ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து நன் கொடை பெற்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பிஜேடி சமர்ப்பித்துள்ளது.  அதில், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் வரை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.944.5 கோடி நன்கொடை வந்துள்ளது.

முதல் 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.213 கோடியும், அதற்கு அடுத்த ஆண்டில் ரூ.50.5 கோடி,2020ல் ரூ.67 கோடியும் கிடைத்துள்ளன. அதன் பிறகு 3 ஆண்டுகளில் ரூ.613 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 2021-22 ல் ரூ.291 கோடி,2022-23 ல் ரூ.170.50 கோடி, 2023-24 ல் ரூ.152 கோடியும் கிடைத்துள்ளது. இதற்கிடையே, சுரங்க தொழில் மற்றும் எஃகு ஆலை நிறுவனங்களிடம் இருந்து பிஜேடி கட்சிக்கு அதிக நிதி கிடைத்தது தொடர்பான காரணங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி உள்ளது.

ஒடிசா காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பொபிதா சர்மா,‘‘ 6 ஆண்டுகளில் இந்தியாவின் மிக பணக்கார கட்சியாக பிஜேடி உருவெடுத்துள்ளது. ஒடிசாவில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள்தான் பிஜேடிக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளன. சுரங்க தொழில் அதிபர்கள் எதற்காக பிஜேடிக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளனர். அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு என்ன கிடைக்கும்?.  தேர்தல் பத்திரங்களின் மூலம் ஆதாயம் அடைந்துள்ள பாஜ கட்சி மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளது’’ என்றார். ஆதித்யா பிர்லா நிறுவனம் பிஜேடிக்கு ரூ.174 கோடி நன்கொடை அளித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது