நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: நாய்களின் உளவியல் மற்றும் நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமானமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்தது. ஒன்றிய அரசின் உத்தரவுக்கு பல மாநில உயர்நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாய்களின் உளவியல் மற்றும் நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்த பிறகே நாய்கள் ஆக்ரோஷமானவையா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து இந்திய கென்னல் கிளப் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்