10 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்: உரிமையாளர் மீது வழக்கு

அம்பத்தூர்: கோயம்பேட்டில் கடைக்குச் சென்றபோது 10 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேடு, நியூ காலனி, 9வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார்(40). இவரது மகள் சஞ்சனா(10), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு திரும்பியபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னையன்(49) என்பவர் வீட்டில் வளர்க்கும் சிறுமி நாய் சஞ்சனாவை விரட்டிச் சென்றுள்ளது.

இதில் கை, கால் ஆகிய பகுதிகளில் நாய் கடித்து குதறியதில் சஞ்சனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நாயை துரத்தி விட்டனர். பின்னர் சிறுமி சஞ்சனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சஞ்சனாவின் தாயார் ரோஜா(35) கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் கோயம்பேடு போலீசார் 289, 337 ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொன்னையனை கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுக்கப்பட்டார். போலீசார் பொன்னையனை கைது செய்து, உடனே ஜாமினில் விடுவித்தது வேதனையாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!