‘தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா?’

விருதுநகர்: விருதுநகரில் எம்பி மாணிக்கம்தாகூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி ஆர்எஸ்எஸ், அமித்ஷா, அதானி, மோடிக்கு எதிராக சுதந்திரமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி. நிதிஷ்குமார் இந்தியாவிற்கே துரோகம் செய்துள்ளார். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. அண்ணாமலை தாங்கள் இருந்த கூட்டணிக்கே வேட்டு வைத்த புண்ணியவான். தங்களது கூட்டணியை உடைத்து விட்டு 7 சீட்டுக்கு யாருடன் கூட்டணி வைக்கலாம் என பாஜவினர் தவித்து வருகின்றனர். அண்ணாமலைக்கு தைரியம், திராணி இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்க தயாரா? பாஜவை மிகப்பெரிய அளவில் வளர்த்து விட்டோம் என சொல்லும் அண்ணாமலை போட்டியிட தயாரா? தயாரில்லை என்றால் அண்ணாமலை போட்டு வந்த வேடம் பொய்யாக பார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்