ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹10 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை

தண்டையார்பேட்டை: முத்தியால்பேட்டையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை முத்தியால்பேட்டை போலீசார், பவளக்கார தெரு கிருஷ்ணன் கோயில் தெரு சந்திப்பில் நேற்று இரவு வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுபோதையில் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ₹10 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் இளையான்குடி பகுதியை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (22) என்பதும் சென்னை ரிச்சி தெருவில் லேப்டாப் விற்பனை கடையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

அப்போது அவர், தனது அண்ணன் நடத்தும் சரக்கு பெட்டக முனைய அலுவலகத்திற்கு பணத்தை எடுத்து செல்வதாக போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை