2 முனைவர்கள், 2 மருத்துவர்கள், 6 வழக்கறிஞர்கள், 19 பட்டதாரிகள்… 21 வேட்பாளர்களை வெளியிட்ட திமுக!!

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் எத்தனை முனைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்

அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் – 2
முனைவர்கள் – 2
மருத்துவர்கள் – 2
பட்டதாரிகள் – 19 ⁠
வழக்கறிஞர்கள் – 6

கலாநிதி வீராசாமி – முதுகலைப் பட்டதாரி – மருத்துவர். எம்.சி.எச். (பிளாஸ்டிக் சர்ஜரி) ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 2001 இல். மற்றும் எம்.எஸ். (பொது அறுவை சிகிச்சை) ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்.

தமிழச்சி தங்கபாண்டியன் – முனைவர் பட்டம் பிஎச்.டி மெட்ராஸ் பல்கலைக்கழகம்-2010

தயாநிதி மாறன் – பி.ஏ. (பொருளாதாரம்) லயோலா கல்லூரி

தருமபுரி – ஆமணி – வழக்கறிஞர்

டி ஆர் பாலு – சென்னை, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல்

ஆ ராசா – பட்டதாரி தொழில்முறை, இளங்கலை அறிவியல், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1984, இளங்கலை சட்டப் பட்டம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் 1987

கதிர் ஆனந்த் – முதுகலைப் பட்டதாரி – 1997 இல் பால்ட்வின் மற்றும் வாலஸ் கல்லூரி USA இல் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், 1995 இல் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை, மெட்ராஸ் பல்கலைக்கழகம்

கனிமொழி – எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஏ 1994,

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

1.வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
2.மத்திய சென்னை – தயாநிதி மாறன்
3.தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4.காஞ்சிபுரம் – செல்வம்
5.ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
6.ஈரோடு – பிரகாஷ்
7.நீலகிரி- ஆ.ராசா
8.திருவண்ணாமலை- அண்ணாதுரை
9.வேலூர்- கதிர்ஆனந்த்
10.தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
11.தர்மபுரி – ஆமணி
12.கள்ளக்குறிச்சி – மலையரசன்
13.பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
14.தூத்துக்குடி- கனிமொழி
15.கோவை – கணபதி ராஜ்குமார்
16.அரக்கோணம் – ஜகத்ரட்சகன்
17.சேலம் – டிஎம். செல்வகணபதி
18.தஞ்சாவூர்- முரசொலி
19.பெரம்பலூர்- அருண் நேரு
20 ஆரணி – எம்.எஸ். தரணி வேந்தன்
21.தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்

50 சதவீதத்துக்கு மேல் புதுமுகங்கள் போட்டி

தருமபுரி – ஆ.மணி, ஆரணி தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி, ஈரோடு – கே.ஏ.பிரகாஷ், கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, பெரம்பலூர் அருண் நேரு, தஞ்சாவூர் முரசொலி, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி ராணி ஸ்ரீகுமார்

3 பெண்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி – கனிமொழி, தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு