அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் : அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு ஆய்வு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (12.08.2024) பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்காக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முருக பக்தர்கள் ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இம்மாநாட்டிற்காக கல்லூரி வளாகத்தில் மாநாட்டு பந்தல், ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்பு புகைப்படக் கண்காட்சி. வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், உணவுக்கூடங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., தவத்திரு பேரூர் ஆதீனம் முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ.பிரதீப், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, தலைமை பொறியாளர் திரு.பொ.பெரியசாமி, இணை ஆணையர்கள் திரு.ச.இலட்சுமணன், திரு.பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி, திருமதி இரா.வான்மதி, திரு.எம்.கார்த்திக், திரு.செ.மாரிமுத்து, கண்காணிப்பு பொறியாளர் (தலைமையிடம்) திரு. ச.செல்வராஜ், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. க.சந்திரமோகன், அறங்காவலர்கள் திரு.ச.மணிமாறன், திரு.கே.எம்.சுப்பிரமணியன், திரு.ரா.ராஜசேகரன், திருமதி ஜெ.சத்யா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு