திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

தொகுதிகளை சுமூகமாக பங்கிட்டுக் கொள்வோம்:

திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம். கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. திமுக தொகுதிப் பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலுவுடன் விசிக நிர்வாகிகள் விரைவில் பேசுவார்கள். திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக வலிமையாக இருந்து வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக தொகுதி கேட்போம்:

தமிழ்நாட்டில் தான் இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுத் தொகுதியை கேட்க உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதலாக தொகுதிகளை கேட்போம் என தெரிவித்தார்.

யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம்:

யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம்; பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம். யாரும் அரசியலுக்கு வரலாம்; மக்களுக்கு பணியாற்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை, அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; முற்போக்கு பார்வை, சிந்தனை இருப்பதாக தெரிகிறது: அதனை வரவேற்கிறோம்; ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார் என திருமாவளவன் கூறினார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்:

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சிகளை பாஜக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் பாசிச போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். கோயில்களில் இந்துக்கள் அல்லாதோரை வழிபட அனுமதி மறுப்பது தொடர்பான சட்டம் திருத்தப்படவேண்டும் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு