நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்;

ஆளுநர் நியமனம்:
ஆளுநர் பதவி தேவையில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. ஆனால் நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது அந்தந்த மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஆளுநர்களை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும் என நீதிபதி எம்.எம். பூஞ்சி, நீதிபதி வெங்கடாசலையா, நீதிபதி சர்க்காரியா ஆகியோர் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர்.

இப்பெருமக்களின் பரிந்துரைகளுக்கேற்ப ஆளுநர்களை நியமிக்கும் போது மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும்.

அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்பட வேண்டும்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்

அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்பட வேண்டும்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை:
உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை பிற வரையறுக்கப்பட்ட இடங்களில் அமைக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 130இல் கூறப்பட்டுள்ளது. 12 வது சட்டக் கமிஷனின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் ‘சட்டக் கமிஷன் Report No.230 Date: 5.8.2009 அறிக்கையில்” இதைக் குறிப்பிட்டுள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மக்கள் தொகையிலும் பல்வேறு வகையிலும் வெகு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதுவை மாநில அரசு நிர்வாகம், தேவையான அதிகாரங்களைப் பெற்றிடாததால் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் தாமதமின்றி நிறைவேற்ற இயலாத நிலையில் புதுவை அரசு உள்ளது. எனவே, புதுச்சேரியைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட மிசோரம், முழு மாநில அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தந்திட திமுக முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.

தமிழ் ஆட்சி மொழி
நம் தாய் மொழியாம் செம்மொழித் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பு-மொழி ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்திடவும், அதற்காக எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு தொடர்ந்து அவ்வழியில் தி.மு.கழகம் உறுதியுடன் பணியாற்றி வருகிறது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரை, ஒன்றிய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் அப்போதைய பிரதமர் பண்டித நேரு அவர்கள் வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டுமென்று, 1996 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சி நடைமுறைப்படுத்தும். அதுவரை, ஒன்றிய அரசுப் பணிகளுக்கும், ஒன்றியப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும், இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்குப் புதிய அரசு ஆவன செய்யும்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி:
செம்மொழியான தமிழ், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழிலும் செயல்பட வேண்டுமென்றும், இதற்காக இந்திய அரசிலமைப்புச் சட்டம் 343 ஆவது பிரிவில் உரிய சட்டதிருத்தம் கொண்டுவரவும் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் சமஅளவு நிதி:
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 8வது அட்டவணையில் இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் 2023-2024 நிதிநிலை அறிக்கையில் இந்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.1487 கோடியும், தமிழ் மொழிக்கு ரூ.74 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அநீதியாகும். இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஅளவு நிதி ஒதுக்கப்படும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி:
இந்திய ஆட்சி மொழிச்சட்டம் 1963, பிரிவு-7ன் படி, இந்தி அல்லது மாநிலங்களின் ஆட்சிமொழிகள் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் மற்றும் உத்தரவுகளில் பயன்படுத்தப்படலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநர் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் அதனையேற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ஆட்சிமொழிச் சட்டம் கூறுகிறது.

அதன் அடிப்படையில், கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 6-12-2006 அன்று தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கிட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்றும் ஆளுநர் ஆகியோரின் பரிந்துரையுடன் ஒன்றிய அரசுக்கு 11-2-2007 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்றியத்தில் அமையும் புதிய அரசு, தமிழை, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்று ஆணை பிறப்பிக்கும்.

தமிழ் வளர்ச்சி – செம்மொழி:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் சென்னையில் அமைக்கப் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil, Chennai) தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடர்ந்து மேலும் செம்மையுடன் செயல்படும். ஒன்றியத்தில் புதிய அரசு ஏற்பாட்டில் செம்மொழித் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் உலகப் பொது மறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட புதிய அரசு ஆவன செய்யும்.

தாயகம் திரும்பிய தமிழர் குடியுரிமை:
இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்களும், அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி சிறீமாவோ பண்டார நாயகா இந்திய- இலங்கை ஒப்பந்த அடிப்படையில் நாடு திரும்பியவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். ஒன்றியத்தில் புதிய அரசு ஏற்பாட்டில் செம்மொழித் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் உலகப் பொது மறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட புதிய அரசு ஆவன செய்யும்.

தாயகம் திரும்பிய தமிழர் குடியுரிமை:
இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்களும், அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி – சிறீமாவோ பண்டார நாயகா இந்திய- இலங்கை ஒப்பந்த அடிப்படையில் நாடு திரும்பியவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். மேலும், ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், புதிய ஒன்றிய அரசு மூலம் ஆவன செய்யப்படும். அத்துடன் இவர்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

சேதுசமுத்திரத் திட்டம்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெருமளவு உருவாக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு காலக் கனவுத்திட்டம் காமராசரும், அண்ணாவும், கலைஞரும் நீண்ட காலமாகப் போராடி வந்த மாபெரும் திட்டம் சேதுசமுத்திரத் திட்டம். இத்திட்டம். ஏறத்தாழ 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.7.2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கணிசமான பணிகள் முடிவடைந்த நிலையில் பிற்போக்குச் சக்திகளால் முடக்கப்பட்டுள்ளது. சேதுசமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேறவும், தென் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி பெறவும், இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஒன்றிய அரசின் முகமைகள்
2 நீதிமன்றம். ஒன்றிய தலைமைக் கணக்காயர், ஒன்றிய புலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி, பல்கலைக் கழக மானியக் குழு, இந்திய மருத்துவக் குழு, தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசின் கல்வி வாரியங்கள். அனைத்திந்தியத் தொழில் நுட்பக் குழு போன்ற பல்வேறு முக்கிய அமைப்புகள் சுயாட்சியுடன் செயல்பட்ட நிலைக்கு இன்று பா.ஜ.க. ஆட்சியில் பேராபத்து நேர்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மேற்கண்ட அரசியலமைப்பு நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடு இன்றியும், தன்னிச்சையாகவும் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

பா.ஜ.க. அரசின் வாய் ஜாலங்கள்; எய்ம்ஸ் மருத்துவமனை
2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்று நாம் அறிவித்த கலைஞர் நூற்றாண்டு அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை ஓராண்டுக்குள் கட்டிமுடித்துத் திறந்து வைத்துள்ளோம். நாம் சொன்னதைச் செய்பவர்கள். பா.ஜ.க வினர் சொன்னதைச் செய்வதில்லை என்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையே சாட்சி. அதேபோல, பாஜ.க. அரசு சொன்னதைச் செய்யவில்லை என்பதற்கு மேலும் சில சான்றுகள்:

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி அறிவித்ததில் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

ராமநாதபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சனை இரண்டையும் தீர்க்க ஒரு குழுவை அமைப்போம் என்றார். அமைக்கவில்லை.

உலக நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து வங்கிகளில் உள்ள இந்தியர் ஒவ்வொருவர் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். செய்யவில்லை.

மீனவர்களுக்கு சேட்டிலைட் வசதி செய்து கொடுப்போம்: இதன் மூலம் எங்கு மீன் அதிகம் கிடைக்கிறது என்று சொல்வோம். அந்த வசதியை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அந்த சேட்டிலைட் வசதியைச் செய்து கொடுக்கவில்லை.

இப்போது தமிழக மீனவர்களை இலங்கை அரசு தாக்குகிறது. ஏனென்றால் இந்தியாவில் பலவீனமானவர் பிரதமராக இருக்கிறார் என்னைப்போல் துணிச்சலான இரும்பு மனிதராக ஒரு பிரதமர் வந்தால் தமிழக மீனவர்மீது இலங்கைத் தாக்குதல் நடத்தாது என்றார் மோடி இதையும் ராமநாதபுரத்தில் தான் கூறினார் மோடி, இப்போது முன்பைவிட அதிகமாகத் தான் இலங்கையின் தாக்குதல் நடக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு 2014 – இல் ஈரோடு வந்த மோடி பாஜக ஆட்சிக்கு வந்ததும் மஞ்சள் விவசாயிகளின் வாழ்க்கையைப் பிரகாசம் அடையச் செய்வேன் என்றார் நடைபெறவில்லை.

அதன்பின் திருப்பூருக்குச் சென்ற மோடி அங்கே சாயப்பட்டறை, குளைக் கழிவுகள் மட்டும்தான் பிரச்சினை எனவே பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விடலாம்: ஜவுளித் தொழில் வளம்பெறும் என்றார். அதன்படி பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை:

அதன்பின் சேலம் சென்றார். அங்கே சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றார்; நவீனமயமாகவில்லை.

அங்கு, மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்குவேன் என்றார். வளமாக்கவில்லை.

விவசாயிகளுக்கு அவர்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான சிறப்பு வசதிகளைச் செய்து கொடுப்பேன் என்றார். செய்யவில்லை.

அடுத்து கிருஷ்ணகிரிக்கு வந்த மோடி இந்தப் பகுதியே வளர்ச்சி குன்றியது பின் தங்கிய இந்தப் பகுதியை முன்னேற்றுவேன் என்றார். அதன்படி கிருஷ்ணகிரிக்காக ஒரு திட்டமும் வரவில்லை.

கன்னியாகுமரியில் பேசிய மோடி கன்னியாகுமரியை உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார். மாற்றுவதற்கு எதையும் செய்யவில்லை.

இந்தியாவுக்குள் இருக்கும் கருப்புப் பணம் ஏறத்தாழ 5 லட்சம் கோடி ரூபாயைக் கண்டு பிடிக்கப்போகிறேன் எனச் சொல்லி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து வங்கிமுன் பல மணி நேரம் வரிசையில் நின்று பலர் இறக்கக் காரணமாகி, பின்னர் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார். வழங்கவில்லை.

பா.ஜ.க அரசின் ஊழல் சில:
சி.ஏ.ஜி (CAG) அறிக்கையின் மூலம் பாஜக வின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சதிற்கு வந்திருக்கின்றன. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச் சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம். எச்.ஏ.எல் விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுளதாக சி.ஏ.ஜி தெரிவித்திருக்கிறது. பிரெஞ்சு நாட்டு ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையை விட 41 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய பாஜக அரசால் ஆணை வழங்கப்பட்டது.

தேர்தல் நேர ஏமாற்று வேலை:
வீடுகளில் சமையலுக்குப் பயன்படும் எரிவாயு சிலிண்டர் விலையை 400 என இருந்ததை 1000 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் குறைக்கப்படும் எனத் தேர்தல் நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள். இதுவும் ஏமாற்று வேலை தானே.

மாநிலங்களை அழிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு:
மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது நிதி. அந்த மாநில வளர்ச்சிக்கான ஆக்ஸிஜனை நிறுத்துவது போல் மாநிலங்களின் நிதி ஆதாரத்தைப் பறித்து மாநிலங்களை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க அரசு.

மெட்ரோ ரயில் திட்ட நிதி:
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து 50:50 என்ற விகிதத்தில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு இதுவரை ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. மேலும் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் கருத்துரு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்படாமல் தேங்கிக்கிடக்கிறது இந்த ஆண்டில் மேலும் 12,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு முறையாக நிதிவழங்காமல், வளர்ச்சியைத் தடுக்கிறது பா.ஜ.க அரசு.

அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத பா.ஜ.க அரசு:
2023 டிசம்பர் 2 3 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும் மிக்ஜாம் புயலும் மழையும் தாக்கி மாபெரும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை அல்லல்படுத்தியது. அதேபோல, டிசம்பர் 17, 18 தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களும் கடும் மழையால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பேரழிவைச் சந்தித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளித்து, வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து அதிகம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.6000 வீதமும் குறைந்த பாதிப்புகளுக்கு ஆளான குடும்பங்களுக்கு ரூ.1000 வீதமும் நிவாரண உதவிகளை வழங்கி மனித உயிரிழப்பு கால்நடைகள் இழப்பு, பயிர்ச் சேதங்கள் என அனைத்திற்கும் நிவாரணத்தொகைகளை உயர்த்தி வழங்கியது திராவிட மாடல் அரசு.

முதலமைச்சர் 19-12-2023 அன்று புதுடெல்லி சென்று பிரதமர் அவர்களைச் சந்தித்து மழை வெள்ள நிவாரண உதவிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். சென்னைக்கு ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தூத்துக்குடி பகுதிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், சென்னைப் பகுதி. தூத்துக்குடி பகுதி இரண்டிற்கும் ஒன்றிய அரசின் குழுக்களும் வருகை தந்து பார்வையிட்டு ஒன்றிய அரசு மூலம் விரைந்து நிதி வழங்கிட ஆவன செய்யப்படும் என அறிவித்துச் சென்ற பிறகும் இதுவரை மழை வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசினால் வழங்கப்படவில்லை.

மழை வெள்ளச் சேதங்களுக்கும், சாலை முதலான கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்திட ரூ.37,000 கோடி நிவாரண நிதியாக வழங்கிட வேண்டுமெனக் கோரிக்கையை முதலமைச்சர் கடிதத்தின் மூலம் பிரதமருக்கு அனுப்பினார்கள். எந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்காத பிரதமர் வெள்ளம் பாதித்த பகுதிகளைக் கூட வந்து பார்க்கவில்லை. இதற்கு நேர்மாறாக பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரகாண்ட், போன்ற மாநிலங்களுக்கு உடனுக்குடன் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து ரத்து:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டம் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தனிமாநிலம் என்பதும் பறிக்கப்பட்டு காஷ்மீர் ஜம்மு இரண்டும் ஒன்றிய அரசின் நிர்வாகத்திற்குட்ட இரண்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. மாநில உரிமைகளைப் பறித்து மாநிலங்கள் என்ற அமைப்பையே சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு.

புதிய கல்விக் கொள்கை:
2020ம் ஆண்டில் புகுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிரானது; இந்திய மக்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகும். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்துவது தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். ஆகையால், தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்.

ரயில்வே- தனி நிதிநிலை அறிக்கை:
2017 முதல் ஒன்றிய அரசு ரயில்வே துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்படுவதை ரத்து செய்து பொது நிதிநிலை அறிக்கையில் இணைத்துவிட்டது. புதிய அரசு ரயில்வேக்கு தனி நிதிநிலை அளிக்க வகை செய்யும். வந்தேபாரத் போன்ற அதிவேக ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டபின் ரயில்கட்டணம் பலமடங்கு உயர்ந்து நடுத்தர, ஏழை எளியவர்கள் அந்தப் புதிய ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உறங்கும் வசதிகொண்ட ரயில் பெட்டிகளில் ஏ.சி.பொருத்தப்பட்டு ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ரயிலில் பயணம் செய்யும் நோயாளிகள் மற்றும் முதியோர்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். எனவே சிறப்பாகச் செயல்படவும், நிர்வாக வசதிக்காகவும், ரயில்வே நிர்வாகம் படிப்படியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய நகரங்கள் உருவாவதன் காரணமாக, எதிர்காலத்தில் மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில்வே இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வசதியாயிருக்கும்.

இடஒதுக்கீடு:
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடுகள் ஒன்றிய அரசில் இதர பிற்படுத்த பட்டவர்க்கு எதிலும் கடைப்பிடிக்கப்படாமையால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் உயர்வகுப்பு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பட்டியல் இன, மலைவாழ் இன, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் முறையாக அந்நிறுவனங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கி மாநில அளவிலான கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் கண்காணிக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை
விழிப்புணர்வு நகரத் திட்டம் (Vigilant City Program): வெள்ளம், சூறாவளிகள், நிலச்சரிவுகள் போன்ற பல்வேறு பேரிடர்களுக்கு ஆளாகும் நகரங்களைக் கண்டறிந்து, அந்த நகரங்களுக்குத் தனி அந்தஸ்து வழங்கப்பட்டு, தனி விழிப்புணர்வு நகர நிதி உருவாக்கப்பட்டு அந்த நகரங்களைப் பேரிடர் காலங்களில் காத்திட சிறப்பு வழிவகை செய்யப்படும். மாநிலங்களுக்குத் தற்போது ஒன்றிய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி 75 சதவீதம் என்பது 90 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும் பேரிடர் நிவாரண நிதியின் வரம்புகள் மற்றும் நிபந்தனைகளை அந்தந்த மாநில அரசுகளே வகுத்துக்கொள்ளப் பரிந்துரை செய்யப்படும்.நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு மாநிலங்களின் வெள்ளம், சூறாவளிகள், நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்களால் ஏற்படும் இழப்புக்களுக்கும் சீரமைப்புப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் செய்யப்படும்.

கல்வி
தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்குப்பட்டமற்றும் பட்டமேற்படிப்புகளில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வாய்ப்பு அளிக்க தி மு. க குரல் கொடுக்கும். இந்தியாவிற்கு முன்னோடித் திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். சென்னையில் உள்ளது போல் இந்திய தொழில்நுட்பக்கழகம் (IT) மதுரையிலும் இந்திய மேலாண்மைக் கழகம் (IM) கோவையிலும் அமைக்கப்படும். 5000 இளம் அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை உருவாக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

விளையாட்டு
நமது நாட்டின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்து வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாக சுபடி போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டில் சிறந்துவிளங்குவதற்கும் வட்டார அளவில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும் மண்டல அளவில் அதிநவீன சர்வதேச விளையாட்டுப் பயிற்சி மையம் நிறுவப்படும். இந்திய அளவில் விளையாட்டுத் துறைக்குப் புதிய கொள்கை உருவாக்கப்படும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு:
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு இதுவரை மேற்கொண்டு வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்போடு சாதி வாரிக் கணக்கெடுப்பு வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பு என அனைத்துக் கணக்கெடுப்புகளும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படும் என்றார் .

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்