சென்னை : மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை அறிந்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது திமுக குழு. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.