கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை அமைத்துள்ளார். தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், திமுகவில் சரி செய்ய வேண்டிய பிரச்னைகள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது. பிரச்னைக்குரிய பகுதிகளில் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன.

சிலவற்றை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிலவற்றில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் எனவும் குழுவினர் உறுதி அளித்தனர். இதனால் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், வெற்றி என்பது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்