தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டெல்லி : தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டினார். இதனால் திமுக – பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது