திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி: உண்மையை ஒத்து கொண்ட பாஜ நிர்வாகி


விழுப்புரம் ரயில் நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்பியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டார். ஒன்றிய அரசு தொடர்பான நிகழ்ச்சி என்பதால் பாஜ மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கலிவரதன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரிடம் கடந்த 5 ஆண்டு காலம் பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைத்தோம். இன்னும் சில கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்.

அடுத்து வரவுள்ள 5 ஆண்டு காலத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்’ என தெரிவித்தார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் மீண்டும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சி போட்டியிடுகிறது. தற்போதைய எம்பியான ரவிக்குமாரே வேட்பாளராக களமிறங்கலாம் என்று தகவல் பரவும் நிலையில், அவரின் வெற்றி உறுதி என்பதை இப்போதே ஒப்புக்கொள்ளும் வகையில் பாஜக மாவட்ட தலைவர் சூசகமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு