நாடு முழுவதும் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 உரிமை தொகை : திமுகவை பின்பற்றி அதிமுக தேர்தல் வாக்குறுதி!

சென்னை : நாடு முழுவதும் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹3000 ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..

*நாடு முழுவதும் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தப்படும்

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னை நடத்த வலியுறுத்தப்படும்.

* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வலியுறுத்தப்படும்.

* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். குற்றவியல் வழக்கு சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வேண்டும்.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வேண்டும்.

* ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வலியுறுத்தப்படும்

* ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க கோரிக்கை வைக்கப்படும்.

* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படும்.

* நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை.

* தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

* சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

* 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.

* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்.

* நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’