திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து சென்னை திரும்பிய நிலையில் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை ஊகத்தின் அடிப்படையில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கலைஞர் நினைவிட நிகழ்வை காங்கிரஸ் புறக்கணித்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டம் காரணமாக கலைஞர் நினைவிட திறப்பு நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் கூறினார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்