சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை


சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை – ஒருங்கிணைப்புக்குழு சார்பிலான ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர் , மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தொகுதி நிலவரம் – தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் – கழக அரசின் திட்டங்களின் நிலை உள்ளிட்டக் கருத்துக்களை கேட்டறிந்தோம். வெறுப்பையும், வேற்றுமையையும் விதைக்கும் பாசிஸ்ட்டுகளை விரட்ட, INDIA கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம் என கேட்டுக்கொண்டார்

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி