தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதி காய்ச்சல், இருமல் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அடுத்த சில நாள்களில் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா் படிப்படியாக நலம் பெற்றாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த டிச.11ம் தேதி வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.26ம் தேதி மாலை மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்று(டிச.28) வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்த, மருத்துவ அறிக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது