2011ம் ஆண்டு அமைத்த வெற்றிக் கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளோம் : தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!!

சென்னை : 2011ம் ஆண்டு அமைத்த வெற்றிக் கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளிலும் தேமுதிக 5 தொகுதிகளிலும் புதிய தமிழகம் ஒரு தொகுதியிலும் எஸ்டிபிஐ ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. இந்த நிலையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.அவரை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.அதிமுக முன்னணி தலைவர்களுடன் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு சென்றுள்ளார். 24-ம் தேதி அதிமுக சார்பில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக சார்பில் பங்கேற்க உள்ளோம். திருச்சி பொதுக்கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறோம். கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது. 2011 தேர்தலைப் போல வெற்றிக் கூட்டணி தற்போது அமைந்துள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். வேட்பாளர் தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்றோ அல்லது நாளையோ தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 40 வேட்பாளர்களும் 25-ம் தேதி ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தேமுதிக மாநிலங்களவை சீட்டில் யார் போட்டி என பின்னர் அறிவிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு