தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய அனுமதி: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்க செய்ய அனுமதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28ம்தேதி காலமானார். அவரது உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கும் தீர்மானம் உட்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்