கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானல்: கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி நடைபெற்ற பிரபல தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் விடுதியில் நள்ளிரவில் சோதனை நடத்திய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் டிஸ்கோ ஜாக்கி, அதிக ஒலி எழுப்பும் கருவி, கேம்பயர் உள்ளிட்டவை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் உள்ள பிரபல விடுதியின் கான்பரன்ஸ் ஹால் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு விடப்பட்டுள்ளது. விடுதி அரங்கத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் சில தினங்களாக தடையை மீறி டிஜே நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசில் புகார் எழுந்துள்ளது. புகாரை அடுத்து கோட்டாட்சியர் சிவராமன், டிஎஸ்பி மதுமதி, நகராட்சி ஆணையாளர் சத்யநாதன் நேரில் சோதனை நடத்தியுள்ளனர்.

விடுதி அரங்கத்தில் டிஜே நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவிகள் நடனமாடிக் கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது. டிஸ்கோ ஜாக்கி ஏற்பாட்டாளர், விடுதி மேலாளர் உள்ளிட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டிஸ்கோ ஜாக்கி ஏற்பாட்டாளர் மிதுன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட டிஸ்கோ ஜாக்கி இசை கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!