தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் இடையே நாளை 1 நாள் மட்டும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மாலை 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். அதே போன்று மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு