தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவ.10ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வரவு வைக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடப்பு மாதத்திற்கான தொகையை முன்னதாகவே வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் பலனடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. இதையடுத்து மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடப்பு மாதத்திற்கான தொகையை முன்னதாகவே வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.10 வரவு வைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!