தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!!

சென்னை : தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு
இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ தெரிவித்துக்கொள்கிறது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்