தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடந்த உலக சுற்றுலா தினவிழாவில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரேஷன் கடைகளை திறந்து விரைவில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவர்னர் எப்போதே ஒப்புதல் கொடுத்துவிட்டார். இலவச அரிசி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு டென்டர் விடப்படவுள்ளது. தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப்படும். மத்தியில் எங்களுடைய தேஜ கூட்டணி அரசுதான் உள்ளது. எங்களுக்கு எப்போதும் தேவையான உதவியை மத்திய அரசு செய்து வருகிறது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்

ஆபத்தான நிலையில் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு