தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சென்னை தீவுத்திடலில் வரும் அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 55 கடைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பட்டாசு கடைகளை அமைக்ககடையின் உரிமையாளர்களுக்கு சில விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகளை அமைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு