தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்..!!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது, இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை நவம்பர் 10-ம் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிடுவர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர்களுக்கு முன்பதிவானது இன்று தொடங்கியது. இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், தற்போது தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் அதிகம். எனவே அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். நவம்பர் 10-ம் தேதி பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

நவம்பர் 11-ம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. www.tnstc.in என்ற அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுடன் கூட்டம் நடத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு